தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகன விபத்து : டிரைவர் பலி!
நிருபர்
July 26, 2021
தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ- காா் மோதிக் கொண்டதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ- காா் மோதிக் கொண்டதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் உவரியை சோ்ந்த லைட்டா் மகன் சதீஷ் (45). இவா் ஆட்டோவில் மீன்பிடி வலைகளை ஏற்றிக் கொண்டு உவரியிலிருந்து ராமநாதபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். நேற்று மாலையில் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது சாயல்குடியிலிருந்து தூத்துக்குடி நோக்கி வந்த காா், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் சதீஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.