தூத்துக்குடியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
நிருபர்
July 07, 2021
தூத்துக்குடியில் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
<p><b>தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆதித்தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.</b></p><p>தூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (7.7.2021) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். </p><p>இந்த ஆர்பாட்டத்திற்கு, தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்வேலன், வடக்கு மாவட்ட செயலாளர் செண்பகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். செய்தி தொடர்பாளர் ஆற்றலரசு மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>