தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!
நிருபர்
June 28, 2021
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தகராறு செய்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நாகராஜ், விக்டர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா எனும் பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா மற்றும் தமிழகமும் விதிவிலக்கின்றி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கொரோனா பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் பிராணவாயு (oxigen) உற்பத்தி செய்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறது. அதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் எந்த ஒரு கட்டணமோ, விலையோ யாரிடமும் பெறுவதில்லை.

மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.2கோடி மதிப்புள்ள கருவிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் சிலர் உண்மை நிலையை மறைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என பொதுமக்களை திசைதிருப்ப போராட்டம் மற்றும் கலவரங்களை உருவாக்கி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிலர், ஸ்டெர்லைட் நிறுவன பதாகையை அப்புறப்படுத்த வேண்டும் என தகராறு செய்ததோடு பணியிலிருந்த ஊழியர்களையும் பணி செய்ய விடாமல் மிரட்டியுள்ளார்கள்.

எனவே, மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறிப்பிடப்பட்டிருந்தது.