மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளார் அலபன் பந்தோபாத்யாய் மீது ஒழுங்கு நடவடிக்கையை தொடங்கியுள்ள மத்திய அரசு அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

யாஸ் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தவிர்த்தார். இந்தக் கூட்டத்தில் அப்போது தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாயும் கலந்துகொள்ளவில்லை.

இதை தொடர்ந்து அவரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.  ஆனால், அவர் ஓய்வு பெற்றுவிட்டதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவரை தனது ஆலோசகராக நியமித்தார்.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்ததற்காக அலபன் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையின் அடிப்படையில் அவருக்கு வரவேண்டிய ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால் அலபன் பந்தோபாத்யாய்க்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.