• vilasalnews@gmail.com

அமெரிக்க துணை அதிபராகும் இந்திய வம்சாவளி பெண்ணின் கணவர்.. யார் இந்த வான்ஸ்?

  • Share on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் உஷா வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ் அமெரிக்காவின் துணை அதிபராகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிஸ் தோல்வியை சந்தித்துள்ளார். டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்டோரல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எனவே, டொனால்ட் டிரம்ப் வென்று மீண்டும் அமெரிக்காவின் அதிபராகிறார்.

ஜோ பைடன் தலைமையிலான அரசின் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ், துணை அதிபராக தேர்வாகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா சிலுக்குரி, ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டவர். உஷாவின் தாத்தா சென்னையில் பணியாற்றியபோது, உஷாவின் அப்பா சென்னையில் பிறந்தார். உஷாவின் பெற்றோர், 70 களில் அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் குடியேறினர். பிறந்தது முதல் அங்கேயே வசித்து வரும் உஷா, அமெரிக்காவின் தேசிய சட்ட நிறுவனத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

உஷா வான்ஸ், 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு வயது தற்போது 38. உஷா சிலுக்குரி வான்ஸ், யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தில் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராகப் பணியாற்றினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் மற்றும் நீதிபதி பிரட் கவனாக் ஆகியோரிடம் கிளார்க் ஆக பணியாற்றியுள்ளார் உஷா வான்ஸ்.

கடந்த 2014ல் முறையாக டெமாக்ரடிக் கட்சியில் இணைந்தார். உஷா சிலுக்குரியும் ஜே.டி.வான்ஸ் ம் முதன்முதலில் யேல் சட்டக் கல்லூரியில் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்தனர். இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2014 ல் கென்டக்கி நகரத்தில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். தற்போது உஷா - ஜே.டி.வான்ஸ் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

  • Share on

குற்றம்சாட்டிய கனடா...தூதரை வாபஸ் பெற்றது இந்தியா!

எங்கு திரும்பினாலும் ஆணுறுப்பு சிலை.. குடும்பமாக சென்று பார்க்கும் சுற்றுலா பயணிகள்... வினோதத்தின் உச்சம்!

  • Share on