• vilasalnews@gmail.com

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி

  • Share on

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ண மூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ண மூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற் கான உத்தரவை பிரிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி வெளியிட்டார். 

அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், சென்னையில் பிறந்த வருமான 55 வயதான பிரமிளா ஜெயபாலும், கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவில் 47 வயதாகும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பட்ஜெட் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பிரமிளா ஜெயபால், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார் என்பதும், இவர் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிரமிளா ஜெயபாலின் முயற்சியால் தான் அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் 15 டாலர்கள் ஊதியம் தர வேண்டும் எனும் மாற்றம் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘அமெரிக்க மக்களின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிக்கல் தீர்வு குழுவின் தலைவர் கிளைபர்ன் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா வைரசை தோற்கடித்து நமது பொருளாதாரத்தை கட்டமைப்போம்' என்றார்.









  • Share on

இந்தியாவை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் - ஐ.நா பொதுச்செயலாளர்

கொரோனா - 7 புதிய அறிகுறிகள் - இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகளின் ஆய்வு முடிவுகள்

  • Share on