இந்தியாவின் கொரோனா (தடுப்பூசி) உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த மாதம் 3-ந் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை போடும் மிகப்பெரிய பணி இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில் உலகின் பல நாடுகள், இந்தியாவை தடுப்பூசிகளுக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா 10 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கிறது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்வதையொட்டி
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியதாவது:-
இந்தியாவின் கொரோனா (தடுப்பூசி) உற்பத்தி திறன் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சொத்தாக நாங்கள் கருதுகிறோம்.
உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரம் சாத்தியமா என்பதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவில் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.