எல் சால்வடரில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வில்மர் செகோவியாவுக்கு, 1,310 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடரில், கொடூர குற்றங்களுக்கு பிரபலமான, எம்.எஸ்., 13 எனப்படும் கும்பலின் முக்கியப்புள்ளி வில்மர் செகோவியா. இவர் மீது, 33 கொலைகள், கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், இந்த குற்றச் செயல்களுக்காக, வில்மர் செகோவியாவுக்கு, 1,310 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதே போல், 22 கொலைகள், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளி மிகுவல் ஏஞ்சல் போர்டில்லோவுக்கு, 945 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.