உலக பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார் முகேஷ் அம்பானி
புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய செல்வந்தர்கள் பட்டியலின்படி முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சத்து 63 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வது இடத்தில் ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசனும், 9வது இடத்தில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜே பிரின் ஆகியோரும் இடம்பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு குறைந்ததால் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.