இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. இதனை 7 வகையான அறிகுறிகளை கொண்டு கண்டறியலாம் என இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.
இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.
அதாவது தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவில் இது மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார். புதன்கிழமை தகவலின்படி, இங்கிலாந்தில் 39,237 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்த இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால் மீண்டும் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர். இது ஏற்கனவே இருக்கும் வைரஸை விட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது என முதற்கட்ட ஆராய்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசைவலி மற்றும் தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது