• vilasalnews@gmail.com

ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீண்டும் தடை

  • Share on

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து ரயில் மற்றும் விமானங்கள் வருவதை தடை செய்யும் வகையில் தனது எல்லைகளை மூடப் போவதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்தும் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இத்தாலியும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை உருவாகி உள்ளதால் இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

  • Share on

எல்லை அத்துமீறலை இந்தியா பொறுத்துக் கொண்டிருக்காது - அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

7 வகை அறிகுறிகளை கொண்ட புதிய கொரோனா வைரஸ்_ இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவிப்பு

  • Share on