கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன.
கொரோனா என்ற பெருந்தொற்றால் உலகத்தில் பொருளாதார முன்னேற்றம் கடும் சரிவை கண்டுள்ளது. இந்தியாவில் தொழில்நிறுவனங்கள்,வியாபாரிகள், பொது மக்கள் என அனைவரது வாழ்க்கையும் மிகவும் பின் தங்கியுள்ளது.
இதனால் இந்திய அரசு கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்த்துள்ளது. இதனால் உலக வங்கியிடம் இந்தியா கடன் வாங்கியுள்ளது.
கடந்த மே மாதத்தில் 750 மில்லியன் டாலர்களுக்கான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டதால் தற்போது 2ம் கட்டமாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைகளின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக டாக்டர் மொஹாபத்ராவும், உலக வங்கி சார்பாக இந்தியாவின் செயல் இயக்குநர் சுமிலா குல்யானியும் கையெழுத்திட்டனர்.