• vilasalnews@gmail.com

’கைலாசாவுக்கு 3 நாட்கள் இலவச விசா’ -நித்தியானந்தா அறிவிப்பு

  • Share on

கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாவில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்யானந்தா கூறியுள்ளார்.

நித்யானந்தா பேசுவது போன்று வெளியாகி உள்ள வீடியோவில், கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம் என்றும், எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா வரை சொந்த செலவில் வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு கருடா என பெயரிடப்பட்டுள்ள சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • Share on

புரெவிப் புயலின் கோரத் தாண்டவம்; வேரோடு சாய்ந்த மரங்கள்... படகுகள் நாசம்...!

உலக வங்கி இந்தியாவுக்கு 400 மில்லியன் டாலர் கடனுதவி..!

  • Share on