மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி சஜித் மீர் பற்றித் துப்புக் கொடுத்தால் 37 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
2008 நவம்பர் 26ஆம் நாள் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஒன்பது பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் புனே எரவாடா சிறையில் 2012ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டது, முன்னேற்பாடுகளைச் செய்தது லஸ்கர் இ தொய்பா இயக்கத்தின் சஜித் மீர் எனக் கருதப்படுகிறது. அவனைப் பிடிக்க ஏதுவாகத் துப்புக் கொடுப்போருக்கு 37 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.