தொலை தூர பிரதேசங்களுக்கு சென்று அங்கு சுற்றுலா தலங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனத்தில் உள்ள புகைப்பட காரரான ஆல்வாரொ செரிசா என்பர் பெண்கள் இருப்பதே தெரியாமல் 41 ஆண்டுகளாக தன்னந்தனியாக காட்டில் வாழும் அதிசய மனிதனை பற்றி பகிர்ந்த உண்மையான ஓரு விசித்திரமான சம்பவத்தை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
வியட்நாமை சேர்ந்த கோஃவா லேண்ங்கின் தாய், தந்தை இரு சகோதரர்கள் என 5பேர் கொண்ட இக்குடும்பம் வியட்நாம் போருக்கு முன்னர் வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
1972ம் ஆண்டு போரின் போது அமெரிக்க வீசிய ஒரு குண்டில் கோஃவா லேண்ங்கின் தாய் மற்றும் ஒரு சகோதரர் இறந்துவிடுகின்றனர். அந்த அதிர்ச்சியில் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகிய மூவரும் குவாங் மாகாணத்தில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு ஓடி ஒழிய சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் மூவரும் காட்டிற்குள்ளேயே வாழ்க்கையை கழிக்க தொடங்கியுள்னர். அதன்பின்பு, அவர்கள் நகர கிராம பகுதிக்கு திரும்பவே இல்லை. போர் நடந்து கொண்டு இருக்கிறது என்று தந்தை கருதியதால் காட்டில் இருந்து வெளியே வராத அக்குடும்பம் மழை, தேன்காட்டு விலங்குகள், பழங்கள் என கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொண்டு வாழ்ந்து வந்து உள்ளனர்.
இவர்கள் இதுவரை 4 முறை மட்டுமே மனிதர்களை கண்டதாகவும் அப்போது அவர்களை பார்த்த மாத்திரத்தில் ஓடி ஒளிந்து கொண்டும் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.
அப்போது தான் நான் (புகைப்படகாரர் ஆல்வாரொ செரிசா) கோஃவா லேண்ங்கினை தேடி சென்று அவர்களிடம் பேச வேண்டும் என எண்ணினேன். ஆனால் என்னை பார்த்து ஓடி ஒளிந்து கொள்ளுவார்கள். பின்னர், தீவிர முயற்சியில் கோஃவா லேண்ங்கினை பார்த்து பேசினேன். பின்னர் ஒரு வழியாக ஒரு கிராமத்திற்கு அழைத்து வந்து பிறரை போன்று ஒரு மனித வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தினேன்.
கோஃவா லேண்ங்கிற்கு இதுவரை பெண்கள் என்ற ஒரு இனம் பூமியில் இருப்பதே தெரியாது.
ஆனால் தற்போது அவர் பெண்களை பார்த்து அவர்களுடன் வசித்து வருகிறார். இருப்பினும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வேறுபாட்டினை அவரால் தற்போதும் கூட இனம் காண முடியவில்லை. மேலும் லேண்ங்கிற்கு இனப்பெருக்கம் என்பது கூட தெரியாது.
ஆம், காட்டுக்குள் வசித்து வந்தாலும் மனதால் அவர் ஒரு குழந்தையை போன்றவர் ஆகிறார்.
யரையேனும் அடி என்றால் உடனே முரட்டு தனமாக அடித்துவிடுவதும், அவருக்கு சரி, தவறு எது என்று கூட தெரியாமல் கத்தியால் குத்து என்றால் அது உயிரிழப்பை ஏற்படுத்த கூடும் என்று அறியாதவராய் இருக்கின்றார் என கூறுகிறார் ஆல்வாரொ
காட்டுக்குள் மிருகங்கள் என்னை கண்டால் ஓடும் என்று அவர் கூறியதும் எனக்கு விசித்திரமாக தென்பட்டது என்றும்,
கோஃவா லேண்ங்கின் தந்தையின் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் தான் நான் கூறியதற்கு காட்டுக்குள் இருந்து வெளியே வர சம்மதித்ததாகவும் கூறினார் புகைப்பட காரரானன ஆல்வாரொ செரிசா
உலகத்தில் பெண்கள் என்ற ஒரு இனம் இருப்பது கூட தெரியாமல் 41 ஆண்டு காலம் வாழ்க்கை வாழ்ந்த இப்படியும் ஓரு அதிசய மனிதரா ...அப்பப்பா...