• vilasalnews@gmail.com

"பெண்களின் ஆடை குறைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம்" - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

  • Share on

பெண்கள் குட்டையான ஆடைகள் அணிவதால்தான் பாலியல் வன்கொடுமை ஏற்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்.

"எச்பிஓ" தொலைக்காட்சியில் இம்ரான் கானின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய அவர் " பெண்கள் குறைவான ஆடையை அணிவதால் ஆண்கள் பாலியல் ரீதியாக தூண்டப்படுகிறார்கள். அப்படி தூண்டப்படாமல் இருக்க ஆண்கள் ரோபோக்களாக மட்டுமே இருக்க முடியும். இது ஒரு சாதாரண விஷயம். பாகிஸ்தானில் டிஸ்கோத்தே கிடையாது, நைட் கிளப்கள் கிடையாது, இங்கிருக்கும் வாழ்க்கை முறை வித்தியாசமானது" என்றார்.

மேலும் பேசிய அவர் "இப்படி இருக்கும் நாட்டிலேயே ஆண்கள் பாலியல்ரீதியாக தூண்டும் விதத்தில் பெண்கள் உடையணிந்தால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடுமே தவிர வேறு வழியில்லை. பாலியல் வன்முறை நிகழ்வதற்கு இந்த சமுதாயமும் ஒரு காரணமாக இருக்கிறது. இங்குள்ள சமுதாய மக்களுக்கு இதுபோன்ற ஆடைக்குறைப்பு எல்லாம் அறியாதவர்கள். அப்படி இருந்த சமூகத்தில் இப்படியான ஆடைக் குறைப்புகளும் கலாசாரமும் வரும்போது, அதன் பாதிப்பு நிச்சயம் இருக்கும்" என்றார் இம்ரான் கான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜியோ டிவிக்கு அளித்தப் பேட்டியில் இதேபோன்ற பெண்கள் ஆடைக்குறைப்பு குறித்த சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு அப்போதே அவரின் முன்னாள் மனைவி மற்றும் மகளிர் அமைப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

  • Share on

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை… வியப்பை தந்த கண்டுபிடிப்பு..!

பெண்கள் இருப்பதே தெரியாதாம் 41 ஆண்டுகளாக தன்னந்தனியாக காட்டில் வாழும் அதிசய மனிதன்

  • Share on