தூத்துக்குடி பாஜக வழக்கறிஞர் பிரிவு புதிய மாவட்ட தலைவராக சுரேஷ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக இருந்த மகேந்திரன் சமீபத்தில் மறைந்தார் . அவரது பிரிவு ஈடு செய்ய இயலாதது. அவர் விட்டு சென்ற பணியை தொடரும் பொருட்டு, பாஜக மாநிலத் தலைவர் முருகன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரது ஒப்புதலுடன், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கத்திடம் ஆலோசித்து, தற்போது வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சுரேஷ் குமாரை, பாஜக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப் படுவதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மேற்கு மண்டல பொறுப்பாளர் பாலமுருகன் மாவட்ட செயலாளர் மான்சிங், வடக்கு மண்டல பொதுச் செயலாளர் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.