தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து வணிக வரித்துணை இணை ஆணையராக பணிபுரிந்து வந்த சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுபோல் தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.