• vilasalnews@gmail.com

மதுக்கடைகள் திறப்பு : நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவில் குறியிருப்பதாவது :

தமிழகத்தில் கடந்த இரண்டாம் அலை  தொற்று மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் அடிப்படை வாழ்வாதா ரத்திற்கே  மக்கள் மிகவும் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று(14.06.2021) மதுக்கடைகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய இந்த மதுக்கடையை திறக்கக் கூடாது என்று இதே திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்து, இந்த நோய்த்தொற்று காலத்தில் மதுக்கடை களை திறக்க கூடாது என்று போராட்டம் செய்தவர்கள்.

இப்போது ஆளும் கட்சியாக மாறிய திமுக அரசு, இந்த நோய்த்தொற்று காலத்தில், மதுக்கடைகளை திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்து இருப்பது சரியா?  இன்று மட்டுமல்ல என்றுமே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மதுக்கடைகளை திறக்கும் பட்சத்தில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் மகளிர் பாசறை உறவுகள் அனைவரும் சேர்ந்து அனைத்து மதுக்கடைகளையும் முற்றுகையிடுவோம் என்று இதன் மூலம் தெரிவித்தனர். என மனுவில் கூறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாவட்ட செயலாளர் அண்ணலெட்சுமி, மகளிர் பகுதி செயலாளர் பொன்மாரி, தொகுதி தலைவர் பாக்கியராஜ், ரமேஷ், குருதிக்கொடை பகுதி செயலாளர் விஜய் , ஓட்டப்பிடாரம் தொகுதி ஜெகதீஷ் , சகாயம், சுடலை மணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share on

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் மதுபான கடைகள் திறப்பு!

  • Share on