• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

  • Share on

மேலக்கூட்டுடன்காடு ஊராட்சியில் மங்களகிரி நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலக்கூட்டுடன்காடு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று (14.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை துவக்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 1,50,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டத் திற்கு 6000 தடுப்பூசிகள் வழங்கப் பட்டுள்ளது. அதனை எல்லா பகுதி களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சுகாதார துறையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தடுப்பூசி நமக்கு வந்துகொண்டு இருக்கிறது. 

தடுப்பூசி போடும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். கொரோனா இல்லாத நிலைய உருவாக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் நோக்கம் ஆகும். எனவே அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், பில்லா ஜெகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், ஹரிபால கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, வட்டார மருத்துவ அலுவலர் ஜெனிபர் வித்யா, சென்ட் ஜோசப் பள்ளி முதல்வர் பாதர் ரூபர்ட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?

மதுக்கடைகள் திறப்பு : நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

  • Share on