• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 144 டாஸ்மாக் கடைகள் நாளை ( 14.6.2021) திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதன்படி டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 144 டாஸ்மாக் கடைகளும் நாளை   ( 14.6.2021 ) திங்கட்கிழமை முதல் திறப்பதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கும். 

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பும் தடுப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த தடுப்புகள் வழியாக வரிசையாக சென்று மதுபானங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதே போன்று 20 பேருக்கு மேல் கூட்டம் இருந்தால், உடனடியாக டோக்கன் வழங்கப்படும். டோக்கன் வரிசைப்படி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது.

மேலும் கடைகளில் போதுமான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் குடோன் காலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. அங்கு இருந்து கடைகளுக்கு மதுபானங் கள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது போதுமான அளவு மதுபானங் கள் இருப்பு உள்ளதாகவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் கார் கண்ணாடிகள் உடைப்பு - எஸ்.ஐ மகன் உட்பட இருவர் கைது

தூத்துக்குடியில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் தொடர்பில் இருந்தவர்கள் யார்?

  • Share on