தூத்துக்குடி அருகே குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சுரேந்திரன் (20) இன்று மாலை இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.
பின்னர், குளித்துக் கொண்டிரு க்கும் போது சுரேந்திரன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த சுரேந்திரனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.