விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் கிராமத்தில் புதிதாக போட்டப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக கூறி அதன் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நாம் தமிழர் கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கே.சுப்பிரமணி யபுரம் என்ற கிராமத்தில் தற்போது புதிதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. அவை தரமற்ற முறையில் போடப்பட்டு ள்ளதாகவும், அவ்வாறு தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்த தாரர் மீது நடவடிக்கை மேற்கொள் வதோடு, தரமான முறையில் மீண்டும் புதிய சாலை ஏற்படுத்தி தர வேண்டும் என விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதில் தொகுதி செயலாளர் ரமேஸ் குமார், தொகுதி பொருளாளர் பீரவீன், நகர செயலாளர் செய்யது யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.