• vilasalnews@gmail.com

கொங்கராயக்குறிச்சியில் ரத்ததான முகாம்!

  • Share on

கொரோனா பேரிடர் தடுப்பு பணியாக கொங்கராயக் குறிச்சியில் இன்று மாபெரும் ரத்ததான முகாம் நடந்தது.

கொரோனா பேரிடர் காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொங்கராயகுறிச்சி கிளையும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்த தான முகாம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயகுறிச்சி புதிய மர்கஸ் வளாகத்தில் இன்று  நடைபெற்றது.

ரத்த தான முகாமிற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரஷித் காமில், ஸ்ரீவைகுண்டம்  காவல் ஆய்வாளர் அன்னராஜ், ரத்த வங்கி மருத்துவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைத் தலைவர் ருசிஇஸ்மாயில் வரவேற்றார்.

முகாமில், ஸ்ரீவைகுண்டம் சரக டி.எஸ்.பி., வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமினை துவங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது :

ரத்த தானம் செய்பவரிடம் இருந்து எடுக்கப்படும் ரத்தம் முன்பின் அறியாதவர், முகம் தெரியாதவர் மட்டுமின்றி பகைவரின் உயிரைக்கூட பேராபத்து காலத்தில் காப்பாற்றும் வல்லமை படைத்ததாகும்.

ரத்த தானம் போன்று கண் தானம், உடல் தானம் போன்ற விழிப்புணர்வும் சமூகத்திலுள்ள மக்கள் மத்தியில் ஏற்படவேண்டும். 

தற்போதுள்ள கொரோனா காலத்தில் அனைவரும் மிக கவனமாக இருப்பதோடு, முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்திடவேண்டும். நோய் வராமல் தடுத்திட தவறாமல் தடுப்பூசி போட்டியிட வேண்டும் என்றார்.

 இம்முகாமில் 4பெண்கள் உட்பட மொத்தம் 56 பேர் ரத்ததானம் செய்தனர். இதில், பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல்சலாம், பள்ளிவாசல் தலைவர் அப்துல்காதர், ஒன்றிய கவுன்சிலர் மைமூன், கொங்கராயகுறிச்சி கிளை செயலாளர் கலீல்ரகுமான்,   துணைத் தலைவர் பாதுஷா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கிளை  பொருளாளர் சுகுணாமன்சூர் நன்றி கூறினார்.


ரத்த தான முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொங்கராயகுறிச்சி கிளை பசுமை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


  • Share on

தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!

தரமற்ற சாலை : ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கோரிக்கை!

  • Share on