• vilasalnews@gmail.com

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பாஜக ஆர்ப்பாட்டம்!

  • Share on

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13-ம் தேதி(இன்று) காலை பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் தனது குடும்பத்தோடு அவர் வீடு முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில்  14-ம் தேதிமுதல் டாஸ்மாக் கடைகளை திறப்பது என்று அரசு அறிவித்துள்ளது.

முந்தைய ஆட்சியில் கருப்புச்சட்டை அணிந்து, டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வீடுகளின் முன்பு போராட்டம் நடத்திய இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறப்பது அதிர்ச்சியாக, வேடிக்கையாக இருக்கிறது.

எனவே ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி 13-ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,  13-ம் தேதி(இன்று) காலை பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் அவர் வீடு முன்பு நின்று மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தி தனது குடும்பத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில், மாவட்ட செயலாளர் மான்சிங், கிழக்கு மண்டல தகவல்தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Share on

பனங்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவருக்கு போலீஸ் வலை வீச்சு

தூத்துக்குடியில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களில் கண்ணாடிகள் உடைத்து சேதம்!

  • Share on