• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்

  • Share on

தூத்துக்குடியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும் தூத்துக்குடி  சிதம்பர நகரில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர செயலாளர் ராஜா  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்,   மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்டக்குழு குமாரவேல் , ஒன்றியச்செயலாளர் சங்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முத்து,

மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், முத்துகிருஷ்னன், தசலிஸ் மற்றும் நாகராஜ், டென்சிங், செல்வம், காஸ்ட்ரோ, ஜேம்ஸ், பாலா, ஆவடையப்பன், முருகன், அலாய்சிஸ், நாகராஜன்,  தாமோதரன், வரதன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

கேட்டது ஒன்று கொடுத்தது வேறொன்று...அதுவும் வீண் - வேதனையை கொட்டி தீர்க்கும் கிராம மக்கள்!

வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி - வாலிபர் கைது

  • Share on