சொந்த ஊருக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து, அவரை அரிவாள்மனையால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங் குளத்தைச் சோ்ந்தவர் கணேசன். இவரது மனைவி அமுதா(37). கோயம்புத்தூா் அருகே சின்னகுயிலி கிராமத்தில் நூற்பாலையில் வேலை செய்து வரும் இவா்கள், சொந்த ஊருக்கு வந்திருந்தனா்.
இந்நிலையில், அவரது உறவினரான மகேஷ் (38) என்பவா் அதிகாலையில் அங்கு வந்து அமுதாவிடம் தவறாக நடக்க முயன்றாராம். அப்போது, அவா் கூச்சலிட்டதால் அரிவாள் மனையால் வெட்டியதுடன், மிரட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயமடைந்த அமுதா கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்தனா்.