தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி மனு அளித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் வந்த மாநிலத் தலைவர் நாராயணசாமி ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது அதில் நகை கடன்களும் அடங்கும். தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கடன் களில் நகைகள் இன்னும் விவசாயிக ளுக்கு திருப்பித் தரவில்லை.
காலதாமதம் இல்லாமல் விவசாயிகளிடம் நகைகளை விரைவாக திருப்பிக் கொடுத்தால் தற்போது விவசாயம் செய்வதற்கு அந்த நகைகளை வைத்து மீண்டும் கடன் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயிகளின் நகைகள் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கி மட்டுமல்லாமல் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதிக அளவில் கடன்களை வைத்து விவசாய கடன் பெற்றுள்ளனர்.
இதனால் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வைத்துள்ள 5 வரையிலான நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.