திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக தூத்துக்குடி அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஐஏஎஸ் அதிகாரி விஷ்ணு சந்திரன் நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடி தென்காசி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி முழு கூடுதல் பொறுப்பாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் பிறப்பித்துள்ளார்