விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குளத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா மற்றும் காவலர்கள் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது பெரியார் நகர் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் மகன் மாரியப்பன் ( வயது 34 ) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ரூ. 3310 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.