• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் கொலை - 6 பேர் கைது!

  • Share on

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமார் சாத்தான் குளத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதையடுத்து, 18 மணி நேரத்தில் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலைய எல்லைக்குட் பட்ட சாத்தான்குளம் தைக்கா தெரு வைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடு க்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று (10.06.2021) இரவு மார்ட்டின் தனது சகோதர ரான மணிகண்டன் (37) என்பவருடன் இருசக்கர வாகனத்தின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சோந்த பாபு சுல்தான் (50), மைதீன் மீரான் (33), பீர் கான் மகன் புகாரி (29),  ஜிந்தா மகன் ரஸ்ருதியின் (29), பாபு சுல்தான் மகன்கள் பிலால் (23), பாரீஸ் (25),  மகதும் மகன் காதர் (28) அகமது மகன் ஜிந்தா (27), சாகுல் ஹமீது மகன் மகதும் (63) மற்றும் பாபு சுல்தானின் நண்பரான சிவனைந்த பெருமாள் மகன் செந்தில் என்ற பெட்ரோல் செந்தில் (45), பக்கீர் முகமது மகன் அப்துல் சமது (45) மற்றும் சிலர் மார்ட்டினை வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மார்ட்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கேயே முகாமிட்டு சம்மந்தபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.

உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் செய்து பாபு சுல்தான்,  புஹாரி, ரஸ்ருதியின், பாரீஸ், ஜிந்தா மற்றும் அப்துல் சமது ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி 6 பேரை,  18 மணி நேரத்தில் விரைந்து கைது செய்த தனிப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் அவர்கள் 

  • Share on

கயத்தாறு அருகே 2 லட்சம் மதிப்புள்ள 8 லாரி டயர்களை திருடியவர் கைது!

குழந்தைதொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு!

  • Share on