• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

  • Share on

விளாத்திகுளத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த விளாத்தி குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த விளாத்தி குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலுடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் அரசு ஒப்பந்தகாரர் பால முருகன் ஆகியோ ருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்று இருவரின் புகைப்படங் களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய அரசு அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி துறைமுக ஒப்பந்த தொழிலாளர்களின் ஊரடங்கு கால ஊதியத்தை உடனடியாக வழங்கிட பாஜக வலியுறுத்தல்!

கயத்தாறு அருகே 2 லட்சம் மதிப்புள்ள 8 லாரி டயர்களை திருடியவர் கைது!

  • Share on