• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துறைமுக ஒப்பந்த தொழிலாளர்களின் ஊரடங்கு கால ஊதியத்தை உடனடியாக வழங்கிட பாஜக வலியுறுத்தல்!

  • Share on

ஊரடங்கு காரணமாக, தூத்துக்குடி துறைமுக ஒப்பந்த தொழிலாளர் களின் பணிக்கு செல்ல முடியாத நாட்களுக்கான  ஊதியத்தை வழங்கிட மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, அதனை உடனே நடைமுறைப் படுத்திட தூத்துக்குடி துறைமுகப் பொறுப்பு கழகத்திடம் மாவட்ட பாஜக தலைவர் பால்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின்  போது, ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் தூத்துக்குடி துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்கபட்டது .

தற்போது கொரோனா இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால்  துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், கடந்த ஆண்டை போல கொரோனா ஊரடங்கு காலத்தில் வழங்கப்பட்டதை போன்று தற்போது ஊதியம் வழங்க படவில்லை. இதனால் அந்த தொழிலாளர்கள் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து தங்களுக்கு கடந்த ஆண்டை போல ஊரடங்கு காரணமான பணிக்கு செல்ல முடியாத நாட்களுக் கான ஊதியத்தை பெற்றுத் தரும்படி கேட்டு கொண்டனர் . 

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி பாஜக தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக பிரிவு மூலமாக துறைமுக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமான பணிக்கு செல்லாமல் இருந்த அந்த விடுமுறை நாள்களில் அவர்களுக்கான ஊதியம் வழங்குமாறு பாரத பிரதமர் நாரேந்திர மோடியிடமும் , மத்திய நிதியமைச்சர் நிர்மலா சித்தாராமன் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் மத்திய தொழிலாளர் நல பிரிவு அமைச்சகத்திடமும் கோரிக்கை வைக்கபட்டது . 

அதன் அடிப்படையில், துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள்,  ஊரடங்கு காரணமாக பணிக்கு வர முடியாமல் வீட்டில் இருந்த நாட்களை, பணி நாட்களாக கருத்தில் கொண்டு அதற்கான ஊதியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என   நேற்றைய முன்தினமான 09.06.2021 அன்று அதற்கான ஆணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது .  


இந்நிலையில், இந்த ஆணையை உடனடியாக அமுல்படுத்தக்கோரி தூத்துக்குடி துறைமுக சேர்மன் ராமசந்திரன் மற்றும்  துணை சேர்மன் பிமல் குமார் ஜா  ஆகியோரிடம் தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட பொது செயலாளர் வி.எஸ்.ஆர். பிரபு , மாநில பொதுக் குழு உறுப்பினர் இசக்கி முத்து, தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முரளிரத்தினம் , வடக்கு மண்டல தகவல் தொடர்பு தலைவர் காளிராஜ், கிழக்கு மண்டல தகவல் தொடர்பு துறை  தலைவர் ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Share on

நெல் பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

  • Share on