• vilasalnews@gmail.com

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் தொடர் புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன்(50) என்பவர் கடந்த 26.05.2021 அன்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விமலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மாரியப்பனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு அபாயம் : கழிவு நீரை அப்புறப் படுத்த கோரிக்கை!

நெல் பயிர்களில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

  • Share on