தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் சாலையில் தேங்கி யுள்ள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனை சரிசெய்ய சமத்துவ மக்கள் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரையண்ட் நகர் 3 வது தெரு நடுப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக சாக்கடை நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, செல்ல வழியில்லாமல் தெருக்களின் சாலைகளில் சாக்கடை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத் தொல்லை, சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பொதுமக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியா சாக்கடை பிரச்சினையை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.