தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பாண்டில், கார் பருவ சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக மருதூர் மேலக்கால், மருதூர் கீழக்கால், திருவைகுண்டம் தெற்கு பிரதானக்கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய் களின் கீழுள்ள 16922 ஹெக்டேர் பாசனப் பரப்புகளுக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தார் நீர்த்தேக்கங் களிலிருந்து தண்ணீர் திறுந்து விடப்பட்டுள்ளது. மேற்படி வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் கார்பருவ நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம் என்று வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது கருங்குளம், திருவை குண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் வட்டாரங்களில் கார் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டு உள்ளதால் நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும்.
கார் பருவத்தில் நெல் சாகுபடி செய்ய குறுகிய கால இரகங் களான ஏ.எஸ்.டி16, கோ51 போன்ற சான்று பெற்ற விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெற் பயிர் சாகுபடி செய்யும் முன் பசுந்தாள் உரங்கள் விதைத்து பூக்கும் முன் மடக்கி உழுதும், விதைகளை நாற்றாங்காலில் விதைக்கும் முன் வேளாண்துறை மூலம் விநியோகம் செய்யப்படும் உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம் (நெல்), பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றின் மூலம் விதை நேர்த்தி செய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.
திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாள் வயதுடைய இள நாற்றுகளை அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று சதுர வடிவில் நடவு செய்ய வேண்டும். கோனாவீடர் களைக் கருவியை பயன்படுத்தி நடவு செய்ததில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை குறுக்கும், நெடுக்குமாக களையெடுக்க வேண்டும்.இதனால் மண் கிளறி விடப்படுவதுடன், அதிக தூர்கள் வெடிப்பதற்கும் வழிவகை செய்கிறது.
நடவு செய்ததில் இருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு நீரைப் பாய்ச்சி அது வடிந்து லேசான கீறல் வெடிப் புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும்.
தண்டு உருளும் பருவத்துக்கு பின்னரும் மீண்டும் இதுபோல் நீரைப் பாய்ச்சினால் வேர்களின் பணியும், நுண்ணு யிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும். திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை மற்றும் 1 சென்ட் நாற்றாங் கால் போது மானது. குத்துக்கு ஒரு நாற்று வீதம் ஒரு சதுரமீட்டருக்கு 16 குத்துக்களாக நாற்று நடலாம். இதன் மூலம் 40 - 50 சதவீதம் பாசன நீர் சேமிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் விளைச்சலை பெருக்கிடவும், உணவு தானிய உற்பத்தியினை அதிகரிக்கவும் வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.