• vilasalnews@gmail.com

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக புதிய குழு - தமிழக அரசு

  • Share on

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோர் அல்லது தாய் தந்தையில் ஒருவரை இழந்த குழந்தைகளின் நலனுக் காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 29ம் தேதி பல்வேறு நலத்திட்டங்களை  அறிவித்தார். இதனை செயல் படுத்த ஒரு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை யில் நிதித்துறைச் செயலாளரை தலைவராகவும், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலா ளர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைச் செயலாளர், சமூக நலத் துறை ஆணையரை ஆகியோரை உறுப்பினராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இருவரை இக்குழுவில் இணைத்து கொள்ளவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

  • Share on

பரிகார பூஜை நடத்துவதாகக் கூறி தங்க நகைகளை மோசடி செய்த நபர் கைது!

கார் பருவ சாகுபடியில் திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் - வேளாண்மை இணை இயக்குநர் தகவல்!

  • Share on