தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுபணியாளர்களின் குழந்தைகள் 2020ம் ஆண்டு மார்ச்/ஏப்ரலில் நடைபெற்ற 10 மற்றும் 12வது வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர் களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசுத் தொகையும், அதே போன்று அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
அதன்படி 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் சுந்தரி மகன் சுப்பிரமணி, எபனேசர் மகன் டேவிஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மகள் நிதிஷா, தலைமைக் காவர்கள் மாதவன் மகள் நந்திகா தேவி, சுப்பிரமணியன் மகள் தன்யா ஸ்ரீ, சிவசங்கரன் மகள் சுஷ்மிதா, மார்த்தாண்டபூபதி மகன் மான்சிங், சுசிலா மகன் ஆஷிஷ் செல்வராஜ், மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள் மாரியப்பன் மகள் தர்ஷினி, இளநிலை உதவியாளர் ராஜசேகர் மகள் ஸ்வேதா,
12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அருண்;ராஜ் மகள் ஜெயஸ்ரீ, ஆண்டனி அருள்ராஜ் மகன் ஆண்டனி ரீபேன்ஸி, தலைமைக் காவர்கள் குருமூர்த்தி மகள் ஆர்த்தி, இசக்கியம்மாள் மகள் ஹேமலதா, கலைச் செல்வி மகள் கிருத்திகா சக்தி பிரியா, முத்துகிருஷ்ணன் மகள் ஜெகஜோதி, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் மகள் தர்னிகா மேக்டலின், இளநிலை உதவியாளர் சங்கரலிங்கம் மகன் செல்வப்பிரியா,
பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தலைமைக் காவலர் கண்ணன் மகள் சிதம்பர செல்வி ஆகியோருக்கு சிறப்பு கல்வி ஊக்கத் தொகையை இன்று (09.06.2021) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கி, அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர் கணேச பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.