விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாவது அலை இன்னும் குறையாத நிலையில், மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை யடுத்த நாகலாபுரம் கிராமத்தில், அனுமதியின்றி காளியம்மன் கோவில் திருவிழாவை அக்கிராம மக்கள் நடத்தியிருக் கின்றனர்.
மேலும், திருவிழாவையொட்டி கபாடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டிகளையும் அவர்கள் நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து, இது குறித்து விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல், கொரோனா தொற்றை பரப்பும் விதத்தில் அனுமதியின்றி ஊர் திருவிழாவை நடத்தியதற்காக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.