கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழிப்பறி என பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட 3 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 4 அரிவாள்கள், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ரவுடித்தனம், போதைப் பொருள் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பல்வேறு தனிப்படைகள் அமைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சங்கர், பெரிய நாயகம், தனிப்பிரிவு தலைமைக் காவலர் கலைவாணர், முதல் நிலை காவலர் நாசர், காவலர் ராஜலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (06.06.2021) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டயாபுரம் ரோட்டில் ரோந்து சென்ற போது
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் காளியப்பன் என்ற காடை காளியப்பன் (25), தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரித்தங்கம் (20) மற்றும் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் நாராயணன் என்ற லெட்சுமி நாராயணன் (21) ஆகியோர் அரிவாள்களுடன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் இன்று எட்டயாபுரம் ரோட்டில் ஒருவரை வழிமறித்து செல்போனை கொள்ளைய டித்துள்ளதும், மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட திட்டமிடப் பட்டிருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் அவர்களை கைது செய்து, அவர்கள் கொள்ளை யடித்த செல்போனையும், அவர்கள் வைத்திருந்த 4 அரிவாள்கள் மற்றும் அவர்களுடைய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள எதிரிகளில் காளியப்பன் என்ற காடை காளியப் பனுக்கு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் உட்பட 5 வழக்குகள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை, கஞ்சா கடத்தல் என 8 வழக்குகள், சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை என 6 வழக்குகள் உட்பட மொத்தம் 19 வழக்குகளும், மற்றொரு நபரான மாரித்தங்கத்திற்கு சிப்காட் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குள் என 3 வழக்குகளும், நாராயணன் என்ற லெட்சும் நாராயணன் என்பவர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் வழிப்பறி என 25 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை கைது செய்த மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.