பசுவந்தனை அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பசுவந்தனை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் தலைமை யிலான போலீசார் நேற்று (05.06.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது தொட்டாம்பட்டி சமுதாய நலக்கூடம் அருகே தொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவகுமார் (30), கைலாசம் மகன் பிச்சைமணி (39), தங்கராஜ் மகன் கதிரேசன் (31), முருகேசன் மகன் தங்கமாரி (34), முருகன் மகன் கலைச்செல்வன் (34) மற்றும் வெள்ளைச்சாமி மகன் ஆரோக்கியராஜ் (37) ஆகிய 6 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீதாராமன் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுகளும், ரூபாய் 640 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.