கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தனது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் 2 வாரங்களுக்கு முன்பு மிக கடுமையாக இருந்தது. நாளொன்றுக்கு தொற்று ஏற்படக் கூடியவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்த நிலையில், தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வந்த பல்வேறு தடுப்பு பணி காரணமாக தற்போது தொற்று பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தொற்று பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பல்வேறு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனால் "அரசு கலைஞர் மருத்துவமனைகாக" மாற்றப்பட்டுள்ளது.
இதன் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்துவைத்து அங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துவக்கிவைத்தார். மேலும் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டசத்து பெட்டகம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமென்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அரசு மருத்துவ மனைக்கு ஒப்படைத்து அரசு கலைஞர் மருத்துவமனையாக மாற்றியுள்ளார். இவ் மருத்துவமனை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பணியில் இருப்பார்கள். சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி போடுதல், சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்படும். இதன் மூலம் இப் பகுதி மக்களுக்கு கூடுதல் மருத்துவ வசதி கிடைக்கும் என தெரிவித்தார்.
இசைமேதை நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திடத்தில் மரியாதை
இசைமேதை நல்லப்பசுவாமிகள் நினைவிடத்திடத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அம்பாள் பகுதியில் கலைஞர் பிறந்தநாளை யொட்டி வேளாண்மை துறையின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு மரக்கன்று நடவு செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
அதனை தொடர்ந்து விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்க பணிகள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், சுகாதர பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா, விளாத்திகுளம் செயல் அலுவலர் சுந்தரவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இன்ப சேகரன், வேளாண்மைதுறை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர் சாந்திராணி,
திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருபர ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து
ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விசுவநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜாக்கண்ணு, அன்புராஜன், முத்துலட்சுமி, அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் விநாயகமூர்த்தி, தவசி, வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள், பாண்டியராஜன், சென்றாய பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.