தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் தொகுதி வளர்ச்சி நிதி பணிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை வார்டுக்கு மின்தூக்கி (லிப்ட்) வசதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், உறைவிட மருத்துவர் சைலஸ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.