கொரோனா வைரசின் இரண்டாம் அலையினால் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பசியாற்றும் பங்காரு அம்மா அன்னதான திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு 10 நாட்களாக தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், அரசு மருத்துவமனை நோயாளிகள், மீனவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் உட்பட 10 ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன், பொருளாளர் கண்ணன், கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கணேஷ், திரு.வி.க நகர் சக்தி பீட துணைத் தலைவர் ஜோதி, வட்டத் தலைவர் தினேஷ், சிதம்பரநகர்மன்ற தலைவர் சுப்ரமணியன், அன்னதான குழு பொறுப்பாளர்கள் முத்தையா, சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், பொன்காசிராஜா, மணிகண்டன், சுரேந்திரன், ராமலிங்கம், முரளி, சக்திராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க நிர்வாகிகள், சக்தி பீடங்கள் மற்றும் வார வழிபாட்டுமன்ற செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.