• vilasalnews@gmail.com

சாராயம் வடிக்க முயற்சித்த இருவர் கைது - 25 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

  • Share on

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராயம் வடிக்க முயற்சித்த இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 25 லிட்டர் சாராயம் வடிப்பதற்கான ஊறல் கைப்பற்றி அழித்தனர்

காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பால் மற்றும் போலீசார் கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த வடக்கு இலந்தைக் குளத்தில் ரோந்து சென்ற போது ஊருக்கு வடக்கே உள்ள சின்னச்சாமி என்பவருடைய தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த சண்முக சுந்தரம் மகன் வெயில்கனி (37) மற்றும் செல்லத்துரை மகன் காளிராஜ் (19) ஆகிய இருவரும் பழங்களை வைத்து ஊறல் தயார் செய்து, அதன் சாராயம் வடிப்பதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

உடனே போலீசார் மேற்படி 25 லிட்டார் ஊறலை பறிமுதல் செய்து அழித்தான். மேலும் அதற்குரிய தளவாட சாமான்களை கைப்பற்றி மேற்படி இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

  • Share on

தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய பிரதமர் படம் மறைக்கப்பட்டிருந்ததா?

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மேல்மருவத்தூர் பங்காரு அம்மா அன்னதான திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கல்

  • Share on