தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் திருடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முத்தையாபுரம் சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் நைனார் கன்னு மனைவி ராஜேஸ்வரி (34). இவர் தெர்மல்நகர் கேம்ப் இரண்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது தனது மளிகை கடையை கடந்த 23.05.2021 அன்று பூட்டிவிட்டு 02.06.2021 அன்று திறக்கும்போது கடையில் உள்ள ரூபாய் 3,000 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், குளிர்பானங்கள் மற்றும் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி கேம்ப் இரண்டு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முனீஸ்வரன் (22) லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (20), கல்யாணி மகன் அலெக்ஸ் (19) மற்றும் தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (20) ஆகிய நான்குபேர் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து மேற்படி நான்கு பேரையும் கைது செய்தார்.