• vilasalnews@gmail.com

அடர்காடுகள் அமைக்கும் பணி : கனிமொழி எம்பி., அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தனர்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் திட்ட பணிகள் துவக்க நிகழ்ச்சி தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் இன்று (05.06.2021) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மரக்கன்று நடவு  செய்து திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஷரண்யா அறி, மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாநகராட்சி திருவிக நகர் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வஉசி பொறுப்பு கழகத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சமுக பொறுப்பு நிதி ரூ.10.82 லட்சம் மதிப்பில் வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஏக்கர் பகுதியில் சுமார் 2000 மரக்கன்றுகள் மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.


அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார். மேலும், இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சித்த மூலிகை பெட்டகங்கள் விற்பனை செய்யும் பணியை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி, நகர்நல அலுவலர் வித்யா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, முக்கிய பிரமுகர்கள் ஆனந்தசேகரன், ஜெகன்பெரியசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிருமிநாசினி அடிக்கும் பணி - தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கல்!

  • Share on