மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிருமிநாசினி அடிக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய்தொற்றை தடுப்பதற்கு அரசுத்துறை அதிகாரிகள் எம்.பிக்கள் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து, தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவுபடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி முழுவதும் கொரோனா நோய்தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட பணிகள் பஞ்சாயத்து நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி அடிக்கும் பணியை திமுக ஊராட்சி செயலாளரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், வார்டு உறுப்பினர் பாரதிராஜா, கிளைச்செயலாளர் காமராஜ், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம், வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மாசானம், கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் கௌதம், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.