சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த பாஜக தலைவர் எல்.முருகனை, தூத்துக்குடி விமான நிலைத்தில் பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தை பார்வையிட, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.
அவருக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் பால்ராஜ், திருநெல்வேலி மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.