தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா தாக்கம் அதிகரிந்து வந்த நிலையில் தற்போது குறைந்து வருவதாக காணப்படுகிறது.
இன்று மாவட்டத்தில் 344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 105 ஆக உள்ளது.
இதே போன்று 664 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 41 ஆயிரத்து 334 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டம் முழுவதும் மருத்துவமனை மற்றும் வீடுகளில் 7 ஆயிரத்து 482 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் இறந்து உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்து உள்ளது.